» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ, திமுக வேட்பாளர் கருணாநிதி வாக்களிப்பு
வியாழன் 23, ஏப்ரல் 2026 10:33:58 AM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரத் தொகுதி வேட்பாளர்கள், முக்கியப் பிரமுகர்கள் இன்று காலை தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர்.
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ. ராஜூ, கடம்பூர் சிதம்பராபுரத்தில் உள்ள இந்து தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினைச் செலுத்தி ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.
கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளர் கா. கருணாநிதி, கோவில்பட்டி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன், இராமச்சந்திராபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவி மற்றும் மகனுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
தூத்துக்குடியில் மேயர் வாக்களிப்பு
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, போல்பேட்டையில் உள்ள தங்கம்மாள் பள்ளியில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதே வாக்குச்சாவடியில் அவரது சகோதரரும், 'நாம் இந்தியர்' கட்சியின் நிறுவனருமான ராஜா தனது வாக்கினைச் செலுத்தினார்.
இதர வேட்பாளர்கள்:
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் 'நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம்' கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர், வழக்கறிஞர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன், பண்டாரம்பட்டி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
பொதுமக்கள் ஆர்வம்: தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காலை முதலே பெண்கள், முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 50 சதவீதம் வாக்குப்பதிவு: விளாத்திகுளம் தொகுதி முதலிடம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 3:31:00 PM (IST)

திருச்செந்தூரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வாக்குப்பதிவு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 3:20:39 PM (IST)

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை; தூத்துக்குடியில் பரிதாபம்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:18:51 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம்: காலை 11 மணி நிலவரப்படி 35.16% வாக்குப்பதிவு; முதலிடத்தில் தூத்துக்குடி தொகுதி!
வியாழன் 23, ஏப்ரல் 2026 11:53:58 AM (IST)

இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் வாக்களிப்பு
வியாழன் 23, ஏப்ரல் 2026 11:48:07 AM (IST)

திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் : வாக்களித்த பின் கனிமொழி எம்.பி. பேட்டி
வியாழன் 23, ஏப்ரல் 2026 11:10:15 AM (IST)







