» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் : வாக்களித்த பின் கனிமொழி எம்.பி. பேட்டி
வியாழன் 23, ஏப்ரல் 2026 11:10:15 AM (IST)

தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என்றும், திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெறும் என்றும் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் எனப் பலரும் காலையிலேயே தங்களது வாக்குச்சாவடிகளுக்குச் சென்று ஜனநாயகக் கடமையாற்றி வருகின்றனர்.
அந்த வகையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது வாக்கினைப் பதிவு செய்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி கூறியதாவது: "மக்கள் மிகச்சரியான முடிவை எடுப்பார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. நான் எண்களுக்குள் அதிகம் போக விரும்பவில்லை என்றாலும், திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பது உறுதி.
வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு இந்த உண்மை அனைவருக்கும் தெரியவரும். பொதுமக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து வாக்களிக்க வேண்டும். திமுகவின் ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது. உங்கள் எதிர்காலத்திற்கு எது நல்ல ஆட்சியாக இருக்கும் என்பதைச் சிந்தித்து வாக்களியுங்கள். குறிப்பாக, முதல்முறை வாக்காளர்கள் தங்களது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும்." என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 50 சதவீதம் வாக்குப்பதிவு: விளாத்திகுளம் தொகுதி முதலிடம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 3:31:00 PM (IST)

திருச்செந்தூரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வாக்குப்பதிவு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 3:20:39 PM (IST)

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை; தூத்துக்குடியில் பரிதாபம்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:18:51 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம்: காலை 11 மணி நிலவரப்படி 35.16% வாக்குப்பதிவு; முதலிடத்தில் தூத்துக்குடி தொகுதி!
வியாழன் 23, ஏப்ரல் 2026 11:53:58 AM (IST)

இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் வாக்களிப்பு
வியாழன் 23, ஏப்ரல் 2026 11:48:07 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு: காலை 9 மணி நிலவரம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 11:01:53 AM (IST)







