» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மண்ணுக்குள் புதைத்த 221 மதுபாட்டில்கள் பறிமுதல்: தாய், மகன் சிக்கினர்!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:08:12 PM (IST)
கயத்தாறு அருகே கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த 221 அரசு மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, தாய் - மகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா செட்டிக்குறிச்சி முத்துகிருஷ்ணன் காலனி பகுதியில், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாகக் கயத்தாறு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், கயத்தாறு உதவி ஆய்வாளர் காசிநாதன் மற்றும் போலீசார் இன்று அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, அங்குள்ள ஒரு வீட்டின் அருகே மண்ணுக்குள் மறைத்து புதைத்து வைக்கப்பட்டிருந்த 221 அரசு மதுபாட்டில்களை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாகச் செட்டிக்குறிச்சி முத்துகிருஷ்ணன் காலனியைச் சேர்ந்த சுடலைமணியின் மனைவி முத்துலட்சுமி (35) மற்றும் அவரது மகன் இசக்கிப்பாண்டி (19) ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், கள்ளச்சந்தையில் விற்பனைக்காக மதுபாட்டில்களைப் பதுக்கியது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.14லட்சம் பறிமுதல்? வருமான வரித்துறை அதிரடி சோதனை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:43:49 PM (IST)

ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலையை மூடிமறைக்க முயன்றவர் இபிஎஸ் : கனிமொழி எம்.பி. சாடல்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:02:16 PM (IST)

கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை தோல்வி: தேர்தல் புறக்கணிப்பு - பொட்டலூரணி மக்கள் உறுதி!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:32:27 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:03:48 AM (IST)

அரசின் திட்டங்களே எங்களின் வெற்றிச் சின்னம்: திமுக வேட்பாளர் அமைச்சர் கீதா ஜீவன் நம்பிக்கை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:53:10 AM (IST)

தமிழக நலனுக்காக போராடும் உங்கள் வீட்டுப் போர் வீரன் நான்: பிரச்சாரத்தில் ராகுல் காந்தி முழக்கம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:47:24 AM (IST)







