» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருமணமான 6 மாதங்களில் மாயமான புதுப்பெண் கிணற்றில் சடலமாக மீட்பு : போலீஸ் விசாரணை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:37:52 AM (IST)
கயத்தாறு அருகே திருமணமான 6 மாதங்களில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 19 வயது புதுப்பெண், தோட்டத்தில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (33). இவர் கயத்தாறு சுங்கச்சாவடி ஆம்புலன்ஸில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சவலாபேரியைச் சேர்ந்த அரியநாச்சி என்ற அபிக்கும் (19) கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் பண்ணையார் தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.
கடந்த சனிக்கிழமை இரவு செல்வகுமார் பணிக்குச் சென்றிருந்தார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை வீடு திரும்பியபோது, மனைவி அபியை காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) காலை அவர்கள் வசித்து வந்த தோட்டத்திற்கு அருகிலுள்ள கிணற்றில் அபி சடலமாக மிதப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த கோவில்பட்டி தீயணைப்புத் துறையினர், கிணற்றில் இருந்த உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அபிக்குத் திருமணமாகி 6 மாதங்களே ஆவதால், வரதட்சணை கொடுமை அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து சார் ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதமா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருமணமான சில மாதங்களிலேயே இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 243 பதற்றமான வாக்குச்சாவடிகள்: பாதுகாப்பு பணியில் 3,642 போலீசார் தீவிரம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 3:19:44 PM (IST)

அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.14லட்சம் பறிமுதல்? வருமான வரித்துறை அதிரடி சோதனை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:43:49 PM (IST)

ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலையை மூடிமறைக்க முயன்றவர் இபிஎஸ் : கனிமொழி எம்.பி. சாடல்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:02:16 PM (IST)

கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை தோல்வி: தேர்தல் புறக்கணிப்பு - பொட்டலூரணி மக்கள் உறுதி!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:32:27 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:03:48 AM (IST)

அரசின் திட்டங்களே எங்களின் வெற்றிச் சின்னம்: திமுக வேட்பாளர் அமைச்சர் கீதா ஜீவன் நம்பிக்கை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:53:10 AM (IST)







