» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மதுபோதை தகராறில் மீனவர் கொலை : இளஞ்சிறார் உட்பட 3 பேர் கைது!
வியாழன் 9, ஏப்ரல் 2026 10:33:30 AM (IST)
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மீனவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர், மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கீழ வைப்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் இருதயராஜ். இவரது மகன் ஜாய் விக்டோரியன் (26). மீனவரான இவர், திரேஸ்புரம் கடற்கரையிலிருந்து வல்லம் மூலம் மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த ஏப்ரல் 3-ம் தேதி இரவு, ஜாய் விக்டோரியன் தனது நண்பர்களுடன் திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த மூன்று பேர் கொண்ட கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜாய் விக்டோரியனைச் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஜாய் விக்டோரியனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தச் சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் அவர்கள், முதலில் 'கொலை முயற்சி' வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜாய் விக்டோரியன், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜாய் விக்டோரியன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய வடபாகம் போலீசார் இந்தத் தாக்குதல் தொடர்பாக திரேஸ்புரம் ஜெயபால் மகன் லிக்சன் (23), தனபதி மகன் ஐஸ்பர் (29), மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய 3பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள் சின்னம் பட்டியல்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:12:53 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் 1868 ஆக உயர்வு: இறுதி பட்டியலில் 13.88 லட்சம் வாக்காளர்கள்..!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 4:57:32 PM (IST)

மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் அமல்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:49:01 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் ஒப்படைப்பு : ஆட்சியர் தகவல்
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:44:04 PM (IST)

காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:08:02 PM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: வேட்பாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ., பிரச்சாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:25:31 AM (IST)








தமிழன்Apr 9, 2026 - 10:58:43 AM | Posted IP 172.7*****