» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பறக்கும் படை சோதனையில் ரூ.73.66 லட்சம் பறிமுதல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!

செவ்வாய் 7, ஏப்ரல் 2026 4:39:39 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 73,66,296 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் - 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் குறித்த விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் இன்று வெளியிட்டுள்ளார்.
  • உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 73,66,296/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • வாக்காளர்களுக்கு விநியோகிக்கக் கொண்டு வரப்பட்டதாகக் கருதப்படும் ரூ. 10,17,548/- மதிப்பிலான பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
  • சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4,64,425/- மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
  • சோதனையில் கண்டறியப்பட்ட ரூ. 8,71,390/- மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட தொகையில், உரிய ஆவணங்களை முறையாகச் சமர்ப்பித்த நபர்களிடம் இருந்து பெறப்பட்ட ரூ. 62,62,470/- ரொக்கம் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory