» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா : சுவாமி - அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் வீதி உலா!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:52:50 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழாவின் முதல் நாளான இன்று இரவு சுவாமி - அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் பூங்கோயில் சப்பரம் வீதி உலா நடைபெற்றது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலின் சித்திரை பெருந்திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் மற்றும் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. காலை 7.15 மணிக்கு கொடிப்பட்டம் ரத வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து, காலை 10.45 மணியிலிருந்து 11.10 மணிக்குள் கோவிலின் நந்தீஸ்வரர் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு 'தென்னாடுடைய சிவனே போற்றி' எனப் பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் முதல் நாளான இன்று (21.04.2026) இரவு 8 மணிக்கு முக்கிய நிகழ்வாக பூங்கோயில் சப்பரம் வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி சங்கர ராமேஸ்வரர், அம்பாள் பாகம்பிரியாள் மற்றும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுடன் நான்கு ரத வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினசரி காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவர். 7-ஆம் திருநாளில் சிவப்பு சாத்தி தரிசனம், 8-ஆம் திருநாளில் பச்சை சாத்தி தரிசனம், சிகர நிகழ்ச்சியான மகா தேரோட்டம் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி காலை நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு ரத வீதிகள் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்: ரூ.2.75 லட்சம் பறிமுதல் - 8பேர் சிக்கினர்!
புதன் 22, ஏப்ரல் 2026 11:16:32 AM (IST)

தூத்துக்குடி எஸ்.பி., அலுவலகம் அருகே 5½ அடி நீள நல்லபாம்பு மீட்பு!
புதன் 22, ஏப்ரல் 2026 10:57:08 AM (IST)

சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: குழந்தை உள்பட 20 பேர் காயம்!
புதன் 22, ஏப்ரல் 2026 10:33:36 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை தேர்தல் திருவிழா : 6 தொகுதிகளில் 92 வேட்பாளர்கள் களம்!
புதன் 22, ஏப்ரல் 2026 8:08:31 AM (IST)

தூத்துக்குடியில் ரயில்வே கேட் மீது ஆட்டோ மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு - பொதுமக்கள் கடும் அவதி!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:17:01 PM (IST)

தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.1.80 கோடி பறிமுதல்; ரூ.89.41 லட்சம் விடுவிப்பு - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 5:50:02 PM (IST)







