» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சென்னை - தூத்துக்குடி இடையே சிறப்பு அதிவிரைவு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

செவ்வாய் 7, ஏப்ரல் 2026 3:43:35 PM (IST)



தமிழ் புத்தாண்டுப் பண்டிகையை முன்னிட்டுப் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், சென்னை சென்ட்ரல் - தூத்துக்குடி இடையே சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

1. சென்னை சென்ட்ரல் - தூத்துக்குடி (ரயில் எண்: 06151) : வரும் ஏப்ரல் 13, 2026 (திங்கட்கிழமை) இரவு 23.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். மறுநாள் செவ்வாய்க்கிழமை மதியம் 12.15 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.

2. தூத்துக்குடி - சென்னை சென்ட்ரல் (ரயில் எண்: 06152) : வரும் ஏப்ரல் 14, 2026 (செவ்வாய்க்கிழமை) மதியம் 15.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும். மறுநாள் புதன்கிழமை அதிகாலை 03.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடி மேலூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். சென்னை திரும்பும் போது பெரம்பூர் நிலையத்திலும் நிறுத்தப்படும்.

இந்த சிறப்பு ரயிலில் ஏசி இரண்டு அடுக்கு 2, ஏசி மூன்று அடுக்கு 5, தூங்கும் வசதி 11, பொது வகுப்பு 4, மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் 2 என மொத்தம் 24 பெட்டிகள் இணைக்கப்படும்.இந்த சிறப்பு ரயில்களுக்கான (06151/06152) முன்பதிவு நாளை (ஏப்.8) காலை 08.00 மணி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடைக்கால மற்றும் பண்டிகைக்கால நெரிசலைத் தவிர்க்க பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மக்கள் கருத்து

ஓட்டு போட்ட முட்டாள்Apr 10, 2026 - 04:46:20 PM | Posted IP 104.2*****

ஏம்பா ஒரு நாளைக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை 2 ரயில்களை விட துப்பில்லை

தூத்துக்குடிக்காரன்Apr 8, 2026 - 09:39:21 AM | Posted IP 104.2*****

தூத்துக்குடியிலிருந்து காலை நேரத்தில் மதுரைக்கு மற்றும் மாலை நேரத்தில் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு நேரடி மற்றும் தினசரி ரயில் தேவை. இந்த ரயிலை இந்த கோடைகாலத்தில் இயக்க நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் எடுத்தால் மக்கள் பயனடைவர்.

BabuApr 7, 2026 - 10:21:17 PM | Posted IP 104.2*****

oru naal vandiya oturathuju yarku nandri solanum athuku oru letter anupura group irukum tuty la yellam kodeeswaranga mathiri vande bharath vida soluvangale

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory