» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடிதொகுதியில் 22 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு: 6 மனுக்கள் தள்ளுபடி!

செவ்வாய் 7, ஏப்ரல் 2026 3:21:44 PM (IST)

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் உட்பட மொத்தம் 22 வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை, இன்று சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபு தலைமையில் நடைபெற்றது.

இத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் கீதா ஜீவன், அதிமுக வேட்பாளர் செல்லப்பாண்டியன், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஸ்ரீநாத், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜேக்கப் தேவதாஸ் உட்பட மொத்தம் 25 நபர்களிடமிருந்து 33 வேட்புமனுக்கள் பெறப்பட்டிருந்தன.

இன்று நடைபெற்ற தீவிரப் பரிசீலனைக்குப் பிறகு முறையான ஆவணங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட 22 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. போதிய ஆவணங்கள் இல்லாதது மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் சுயேச்சைகள் மற்றும் மாற்று வேட்பாளர்களின் 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தற்போதைய நிலவரப்படி, தூத்துக்குடி தொகுதியில் மொத்தம் 22 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டு, சுயேச்சை வேட்பாளர்களுக்குச் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory