» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் 100% வாக்குபதிவினை உறுதி செய்திட முதல்தலைமுறை வாக்காளர்கள் உறுதியேற்பு

செவ்வாய் 7, ஏப்ரல் 2026 3:17:08 PM (IST)



கோவில்பட்டியில் சட்டமன்ற தேர்தலில் 100% வாக்குபதிவினை உறுதி செய்திட முதல்தலைமுறை வாக்காளர்கள் உறுதியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி ரோட்ராக்ட் கிளப் இணைந்து நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி, எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் முதல்முறை வாக்களிக்க உள்ள 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள், நாட்டின் மாண்புமிக்க ஜனநாயக மரபுகளைப் பாதுகாக்கவும், மதம், இனம், சாதி மற்றும் மொழி பாகுபாடுகளுக்கு இடமளிக்காமல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் வாக்களிப்போம் என உறுதி ஏற்றனர். 

எந்தவொரு ஆசை வார்த்தைகளுக்கும், தூண்டுதல்களுக்கும் ஆட்படாமல் வாக்களித்தல், ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்தல், சமூகத்தில் வாக்குப்பதிவின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவை குறித்து மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இவ்விழாவிற்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் செல்வராஜ், ரோட்டரி சங்க செயலாளர் பழனிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி ரோட்ராக்ட் சேர்மன் ஹரிஹர சுதன் அனைவரையும் வரவேற்றார்.

"ஜனநாயகத்தின் வலிமையே வாக்களிப்பதில்தான் உள்ளது. இளைய தலைமுறையினர் தங்களின் ஜனநாயகக் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்," என ரோட்டரி சங்கத் தலைவர் ராஜ்குமார் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் அருண், ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்து முருகன், கண்ணன், மாரியப்பன், கிருஷ்ணசாமி, மணிகண்டன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவியர் திரளாகக் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக, கல்லூரி ரோட்ராக்ட் ஒருங்கிணைப்பாளர் விஜய கோபாலன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory