» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கணவருடன் தகராறு: கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம் - போலீசார் விசாரணை!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 12:27:26 PM (IST)
கயத்தாரில் கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் 10 மாதக் குழந்தையுடன் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் பாரதி நகர், வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் மாரித்துரை (23). கூலித் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வி (22) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளாகக் காதல் இருந்து வந்துள்ளது. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மதுஸ்ரீ என்ற 10 மாத பெண் குழந்தை உள்ளது.
நேற்று காலை சுமார் 9:00 மணியளவில், மது போதையில் இருந்த மாரித்துரை தனது மனைவி மாரிச்செல்வியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் தனது மனைவியை அடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காலை 10:00 மணியளவில் மாரித்துரை வேலைக்குச் சென்றுவிட்டார்.
மதியம் 2:00 மணியளவில் அவர் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, மனைவி மாரிச்செல்வி தனது தாலியைக் கழற்றி வைத்துவிட்டு, 10 மாதக் குழந்தை மதுஸ்ரீயுடன் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் மாரிச்செல்வி மற்றும் குழந்தை குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து மாரித்துரை கயத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், குடும்பத் தகராறு காரணமாகப் பெண் கோபித்துச் சென்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்: ரூ.2.75 லட்சம் பறிமுதல் - 8பேர் சிக்கினர்!
புதன் 22, ஏப்ரல் 2026 11:16:32 AM (IST)

தூத்துக்குடி எஸ்.பி., அலுவலகம் அருகே 5½ அடி நீள நல்லபாம்பு மீட்பு!
புதன் 22, ஏப்ரல் 2026 10:57:08 AM (IST)

சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: குழந்தை உள்பட 20 பேர் காயம்!
புதன் 22, ஏப்ரல் 2026 10:33:36 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை தேர்தல் திருவிழா : 6 தொகுதிகளில் 92 வேட்பாளர்கள் களம்!
புதன் 22, ஏப்ரல் 2026 8:08:31 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா : சுவாமி - அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் வீதி உலா!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:52:50 PM (IST)

தூத்துக்குடியில் ரயில்வே கேட் மீது ஆட்டோ மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு - பொதுமக்கள் கடும் அவதி!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:17:01 PM (IST)







