» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: மர்ம கும்பலுக்குப் போலீஸ் வலைவீச்சு!

செவ்வாய் 7, ஏப்ரல் 2026 12:20:13 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி தருவைகுளம் அருகே உள்ள வெள்ளப்பட்டிப் பகுதியில் இருந்து இலங்கைக்குப் பீடி இலைகள் கடத்தப்படப் போவதாகக் க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. 

இதனைத் தொடர்ந்து, ஆய்வாளர் தலைமையில் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமைக் காவலர்கள் இருதய ராஜ்குமார், இசக்கிமுத்து மற்றும் காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

வெள்ளைப்பட்டி கடற்கரைச் சாலையில் புதிதாகக் கட்டப்பட்ட பாலத்திற்கு அடியில், இலங்கைக்குப் படகுகள் மூலம் கடத்துவதற்காகப் பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 30 கிலோ எடை கொண்ட 9 மூட்டைகளில் இருந்த பீடி இலைகளை மர்ம நபர்கள் ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது போலீஸார் அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றபோது, கடத்தல் கும்பல் ஆட்டோவில் ஏறி அதிவேகமாகத் தப்பி ஓடிவிட்டது. பின்னர், அங்கிருந்த 9 மூட்டை பீடி இலைகளைப் போலீஸார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. தப்பியோடிய கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? என்பது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory