» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒப்பந்ததாரருக்குக் கத்திக்குத்து: இருவர் கைது!

செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:08:33 AM (IST)

தூத்துக்குடியில் தகராறு செய்து ஒப்பந்ததாரரை கத்தியால் தாக்கிய 2பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி பூபாலராயபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி (50). இவர் ஒப்பந்தத் தொழில் செய்து வருகிறார். நேற்று அந்தோணி தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 4பேர் கொண்ட கும்பல் போதை போதையில் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 

வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த அந்த 4 பேரும் சேர்ந்து அந்தோணியைக் கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அந்தோணி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் காசி பாண்டியன் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். 

முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பூபாலராயபுரத்தைச் சேர்ந்த விஜய் (36) மற்றும் திரேஸ்புரத்தைச் சேர்ந்த சஞ்சய் (24) ஆகிய இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்ற இருவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory