» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை : வாலிபர் கைது - 85 பாட்டில்கள் பறிமுதல்!

செவ்வாய் 21, ஏப்ரல் 2026 5:10:34 PM (IST)

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மது விற்பனைக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களைப் பதுக்கி விற்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி பூ மார்க்கெட் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகத் தூத்துக்குடி நகர தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் அப்பகுதியில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்திருந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர் தூத்துக்குடி அண்ணாநகர் 5-வது தெருவைச் சேர்ந்த சக்திபாலன் (31) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து மொத்தம் 85 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சக்திபாலனை மத்திய பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த தனிப்படை போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory