» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகத்தை வஞ்சித்த டெல்லி அணியை வீழ்த்த வேண்டும்: அமைச்சர் கீதா ஜீவன் பிரச்சாரம்!

செவ்வாய் 7, ஏப்ரல் 2026 10:53:49 AM (IST)



தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்காமல் வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசின் 'டெல்லி அணியை' இந்தத் தேர்தலில் தமிழக மக்கள் வீழ்த்த வேண்டும்" என்று அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவர் இன்று 19, 29, 30 ஆகிய வார்டுகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பிரச்சாரத்திற்கு, மேயர் ஜெகன் பெரியசாமி, மண்டலத் தலைவர்கள் கலைச்செல்வி, நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் அதிஷ்டமணி, சோமசுந்தரி மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 4-வது கேட் பகுதியில் பிரச்சாரத்தைத் தொடங்கிய அமைச்சர், கே.வி.கே. நகர் மற்றும் மகிழ்ச்சிபுரம் பகுதிகளில் வாக்குச் சேகரித்து, டூவிபுரம் விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பிரச்சாரத்தின் போது அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது: தமிழகம் கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால், ஒன்றிய அரசு வழங்க வேண்டிய உரிய நிதியை வழங்காமல் முடக்கி வருகிறது. 100 நாள் வேலைத் திட்டத்தைச் சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் அக்கறை காட்டாத பாஜக - அதிமுக கூட்டணி என்ற 'டெல்லி அணியை' வீழ்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம். எல்லோருக்கும் எல்லாம்" என்ற திராவிட மாடல் ஆட்சியில், தூத்துக்குடி தொகுதியில் புதிய ரேஷன் கார்டுகள், மருத்துவ முகாம்கள், காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கார் தொழிற்சாலை, டைடல் பார்க் போன்ற திட்டங்களால் மாவட்ட வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது மகளிர் உரிமைத் தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு இது 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.தமிழகத்தின் மண், மொழி மற்றும் மானத்தைக் காத்திடவும், கடந்த கால சாதனைகளை எண்ணிப் பார்த்து 'உதயசூரியன்' சின்னத்திற்கு வாக்களித்து என்னைப் பெரும் வெற்றியைப் பெறச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர வர்த்தக அணி அமைப்பாளர் ஆனந்தசேகர், இளைஞர் அணி துணை அமைப்பாளர் செல்வின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளுடன், காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம், தேமுதிக மாவட்ட செயலாளர் தயாளலிங்கம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் யூசுப், எஸ்டிபிஐ தொகுதி பொறுப்பாளர் காதர் உசேன், மதிமுக நகர செயலாளர் முருகபூபதி, கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் முத்து, தனலட்சுமி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory