» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்துத் திருட்டு: போலீஸார் விசாரணை
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 10:51:08 AM (IST)
தூத்துக்குடியில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி சுந்தரராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் பாஸ்கரன் (70). இவர் நந்தகோபாலபுரம் பிரதான சாலையில் (மெயின் ரோடு) மளிகைக் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 10 மணியளவில் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். இன்று காலை 6 மணியளவில் மீண்டும் கடையைத் திறக்க வந்தபோது, கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பாஸ்கரன் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், வடபாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கடைக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த 10 சிகரெட் பாக்கெட்டுகள், 23 குளிர்பான பாட்டில்கள் மற்றும் ரொக்கப் பணம் 3,000 ரூபாய் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்தத் திருட்டுச் சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை தேர்தல் திருவிழா : 6 தொகுதிகளில் 92 வேட்பாளர்கள் களம்!
புதன் 22, ஏப்ரல் 2026 8:08:31 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா : சுவாமி - அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் வீதி உலா!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:52:50 PM (IST)

தூத்துக்குடியில் ரயில்வே கேட் மீது ஆட்டோ மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு - பொதுமக்கள் கடும் அவதி!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:17:01 PM (IST)

தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.1.80 கோடி பறிமுதல்; ரூ.89.41 லட்சம் விடுவிப்பு - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 5:50:02 PM (IST)

வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 5:28:39 PM (IST)

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை : வாலிபர் கைது - 85 பாட்டில்கள் பறிமுதல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 5:10:34 PM (IST)







