» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பட்சி சொன்னதால் கோவில்பட்டியில் போட்டி: குமாரபாளையம் ஜவுளி வியாபாரி வினோதம்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 10:34:14 AM (IST)

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி குணசேகரன் (64) என்பவர் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். கோவில்பட்டி சார் ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஹிமான்சு மங்கலிடம் அவர் தனது மனுவை வழங்கினார்.
வயது முதிர்வு மற்றும் உடல்நிலை காரணமாக, ஆட்டோ மூலம் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த குணசேகரன், வாக்காளர் ஒருவரின் உதவியுடன் நடந்து சென்று தனது மனுவைத் தாக்கல் செய்தார். நாமக்கல்லில் இருந்து வந்து கோவில்பட்டியில் போட்டியிடுவதற்கான காரணம் குறித்துச் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் அளித்த பதில்கள் வியப்பை ஏற்படுத்தின. "பட்சி (ஜோதிடம்/சகுனம்) சொன்னதால் நான் கோவில்பட்டியில் போட்டியிடுகிறேன். இங்கு நிச்சயமாக 30 ஆயிரம் வாக்குகளாவது பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது," எனத் தெரிவித்தார்.
தனது பின்னணி குறித்து அவர் பேசுகையில், "நான் ஜவுளி வியாபாரம் செய்து வந்தேன். சங்க நிர்வாகியாகவும் இருந்தேன். பிரதமர் மோடி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி (GST) வரி விதிப்பு மற்றும் கொரோனா பாதிப்பு போன்ற காரணங்களால் எனது தொழில் நலிவடைந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில்தான், பட்சி சொன்ன ஆலோசனையின்படி கோவில்பட்டியில் போட்டியிட முடிவெடுத்தேன்," என்றார்.
"நிச்சயமாகத் தேர்தல் பிரச்சாரம் செய்வேன், வெற்றியும் பெறுவேன். நான் வெற்றி பெற்றால் செய்தியாளர்கள் அனைவருக்கும் ஆடு வெட்டிப் பிரம்மாண்ட கறிவிருந்து வைப்பேன். மான் கறி கொடுக்க முடியாது, கொடுத்தால் சட்டப்படி வழக்காகிவிடும். அதனால் ஆட்டுக்கறி விருந்து உறுதி," என்று கலகலப்பாகக் கூறிவிட்டுச் சென்றார். மனுத்தாக்கல் செய்ய வந்த இடத்தில் அவர் அளித்த இந்த வினோத பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை தேர்தல் திருவிழா : 6 தொகுதிகளில் 92 வேட்பாளர்கள் களம்!
புதன் 22, ஏப்ரல் 2026 8:08:31 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா : சுவாமி - அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் வீதி உலா!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:52:50 PM (IST)

தூத்துக்குடியில் ரயில்வே கேட் மீது ஆட்டோ மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு - பொதுமக்கள் கடும் அவதி!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:17:01 PM (IST)

தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.1.80 கோடி பறிமுதல்; ரூ.89.41 லட்சம் விடுவிப்பு - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 5:50:02 PM (IST)

வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 5:28:39 PM (IST)

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை : வாலிபர் கைது - 85 பாட்டில்கள் பறிமுதல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 5:10:34 PM (IST)







