» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேர்தல் என்பது திருவிழாவல்ல, தமிழகத்தைக் காக்கும் போர்: அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:14:10 PM (IST)

இந்தத் தேர்தல் களம் என்பது வெறும் திருவிழா அல்ல; இது டெல்லி அணிக்கும், தமிழ்நாடு அணிக்கும் இடையிலான போர்" என தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான திருமதி. கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திமுக வேட்பாளராக திரு. கா. கருணாநிதி போட்டியிடுகிறார். அவரது தேர்தல் வெற்றிக்காக அமைக்கப்பட்ட தேர்தல் பணிமனையை (காரியாலயம்) அமைச்சர் கீதா ஜீவன் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
தொடர்ந்து நிர்வாகிகளிடையே அமைச்சர் பேசியதாவது: "தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த 5 ஆண்டுகளாகத் தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்றுள்ளது. எங்களது தேர்தல் அறிக்கையில் கலைஞர் கனவு இல்லம், மகளிர் உரிமைத் தொகை உயர்வு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்வு எனப் பல்வேறு புரட்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, பெண்களுக்கு வழங்கப்படும் ₹8,000 மதிப்பிலான பரிசுக் கூப்பன் திட்டம் மிக முக்கியமானது. அரசு பொருட்களை வாங்கித் தராமல், மக்கள் தங்களுக்கு வேண்டிய கடைகளில் தங்களுக்குப் பிடித்த பொருட்களைத் தாங்களே வாங்கிக்கொள்ளும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திமுக அரசின் சாதனைகளை வீடு வீடாகச் சென்று மக்களிடம் கொண்டு சேர்ப்பதே வெற்றிக்கான வழி. மதில் மேல் பூனையாக இருக்கும் நடுநிலை வாக்குகளைக் கலந்து பேசி உதயசூரியன் சின்னத்திற்குப் பெற்றுத் தருவது செயல்வீரர்களின் கடமை. தேர்தல் ஆணையம் மிகவும் கடுமையான விதிமுறைகளை விதித்துக் கண்காணித்து வருவதால், கூட்டணி கட்சியினர் மிகுந்த ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும்."
"தேர்தல் காலம் என்பது ஒரு போர் போன்றது. இது நமது மண், மொழி மற்றும் மானத்தைக் காப்பாற்றுவதற்காக டெல்லி அணிக்கு எதிராகத் தமிழ்நாடு அணி நடத்தும் போர். தமிழகத்தைக் காப்பாற்றிட முதல்வர் ஸ்டாலின் மீண்டும் முதல்வராகப் பதவியேற்பது காலத்தின் கட்டாயம்," என்று அவர் உருக்கமாகப் பேசினார்.
இந்நிகழ்வில் திமுக வேட்பாளர் கா. கருணாநிதி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9பேருக்கும் இரட்டை மரண தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 6, ஏப்ரல் 2026 6:00:17 PM (IST)

விளாத்திகுளம் தொகுதி: அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் வேட்பாளர் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 5:42:47 PM (IST)

திருச்செந்தூர்: பாஜக வேட்பாளர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:54:40 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.97 லட்சம் ரொக்கம் பறிமுதல்: தேர்தல் சோதனை தீவிரம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 3:55:07 PM (IST)

மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு மூதாட்டி கொலை வழக்கு ஜாமீன் ரத்து!
திங்கள் 6, ஏப்ரல் 2026 3:43:23 PM (IST)

எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு வதந்திகளை நம்ப வேண்டாம்: ஆட்சியர் விஷூ மகாஜன்
திங்கள் 6, ஏப்ரல் 2026 3:22:43 PM (IST)







