» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.97 லட்சம் ரொக்கம் பறிமுதல்: தேர்தல் சோதனை தீவிரம்!

திங்கள் 6, ஏப்ரல் 2026 3:55:07 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் இதுவரை ரூ.97 லட்சம் ரொக்கம் மற்றும் வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இன்று (06.04.2026) வரை பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்டுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட விவரங்கள் பின்வருமாறு:
  • உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரொக்கத்தொகை ரூ. 71,66,296
  • வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த இலவசப் பொருட்கள் ரூ. 10,12,548
  • பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் ரூ. 4,50,394
  • பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் ரூ. 7,38,890
  • விலைமதிப்பற்ற பொருட்கள் (தங்கம் மற்றும் வெள்ளி) ரூ. 3,43,000
தேர்தல் நேரத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.50,000-க்கும் அதிகமான ரொக்கப் பணம் மற்றும் பரிசுப் பொருட்களைக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கண்காணிப்புப் பணிகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து தீவிரமாக நடைபெறும் என்றும், விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory