» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு: திரளான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்பு
வெள்ளி 3, ஏப்ரல் 2026 12:40:49 PM (IST)

தூத்துக்குடியில் புனித வெள்ளியை முன்னிட்டு, பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் அனுசரிக்கும் தவக்காலம், கடந்த பிப்ரவரி மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வான புனித வெள்ளியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்கத் தேவாலயங்களிலும் சிறப்புச் சிலுவைப் பாதை வழிபாடுகள் நடைபெற்றன.
உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில், இயேசு கிறிஸ்து சிலுவையைச் சுமந்து செல்லும் உருவச் சொரூபம் ஏந்தி, பேராலயத்தைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்தப் பவனியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு உருக்கத்துடன் பிரார்த்தனை செய்தனர். இதனைத் தொடர்ந்து, ஆலயப் பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
தூத்துக்குடி திருஇருதய ஆலயத்தில், தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிலுவைப் பாதை மற்றும் சிறப்புப் பாடுகள் தியான வழிபாடுகள் நடைபெற்றன. மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் திரளான மக்கள் பங்கேற்ற நிலையில், வழிபாடுகளுக்குப் பின் ஆலய நடை சாத்தப்பட்டது.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நாளை (சனிக்கிழமை) நள்ளிரவு அனைத்துத் தேவாலயங்களிலும் 'பாஸ்கா' திருவிழிப்பு வழிபாடுகள் மற்றும் சிறப்புத் திருப்பலிகள் நடைபெறவுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை வழக்கில் தொடர்புடைய நபர் குண்டர் சட்டத்தில் கைது!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 8:29:36 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை: தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 3, ஏப்ரல் 2026 8:22:40 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.60.98 லட்சம் ரொக்கம்; ரூ.4 லட்சம் மதுபானங்கள் பறிமுதல்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 5:48:15 PM (IST)

இது விசுவாசத்திற்கும் துரோகத்திற்குமான தேர்தல்: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆவேசப் பேச்சு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 5:36:02 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஊர்வசி அமிர்தராஜ் மீண்டும் போட்டி : காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:46:00 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 460 புதிய சிசிடிவி கேமராக்கள்: எஸ்பி மதன் தொடங்கி வைத்தார்
வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:34:21 PM (IST)







