» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 24 மணி நேரத் தேர்தல் கட்டுப்பாட்டு அறை: மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!

வெள்ளி 3, ஏப்ரல் 2026 12:12:07 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரத் தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான  விஷு மகாஜன், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாகப் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அளிக்கும் புகார்கள் எவ்வாறு பதிவு செய்யப்படுகின்றன என்பது குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார். மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் நிலைக்கண்காணிப்புக் குழுவினரின் நடமாட்டத்தை ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கும் முறையை ஆய்வு செய்தார்.

கட்டுப்பாட்டு அறைக்கு வரும் அழைப்புகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்கவும், புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் அங்கு பணியில் இருந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கக் கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள் மற்றும் சி-விஜில் (cVIGIL) செயலி ஆகியவற்றைத் தீவிரமாகப் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory