» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 13 நாய்கள் விஷம் வைத்து கொலை? போலீசார் விசாரணை

வெள்ளி 3, ஏப்ரல் 2026 11:16:30 AM (IST)

தூத்துக்குடியில் 13 நாய்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தூத்துக்குடியில் நாளுக்கு நாள் தெருக்களில் நாய்களின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோர்களை விரட்டி விரட்டி கடிக்கிறது. மேலும் இரவு நேரங்களில் நடுரோட்டுகளில் கூட்டம் கூட்டமாய் நாய்கள் கிடப்பதால் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளது. 

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 6வது தெருவில் கடந்த 3 தினங்களில் 13 நாய்கள் மர்மமான முறையில் ஆங்காங்கே இறந்து கிடந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் வடபாகம் காவல் நிலையத்திற்கும் கால்நடை மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் கால்நடை மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று நாய்களை பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மேலும் இந்த நாய்கள் அனைத்தும் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory