» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக விஷு மகாஜன் நியமனம் : தேர்தல் ஆணையம் உத்தரவு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 7:42:13 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மாற்றப்பட்டு புதிய ஆட்சியராக விஷு மகாஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் தயார் நிலை குறித்து ஆய்வு செய்த இந்திய தேர்தல் ஆணையம், தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்டங்களுக்குப் புதிய மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் மற்றும் ஆட்சியர்களை நியமித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.தேர்தல் ஆணையத்தின் செயலாளர் லதா திரிபாதி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி: தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியராக விஷு மகாஜன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தின் புதிய மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியராக டாக்டர் அ. அருண் தம்புராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் பணியில் இணைந்தது குறித்த அறிக்கையை ஏப்ரல் 3-ஆம் தேதி (நாளை) காலை 11:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தற்போது மாற்றப்பட்டுள்ள அதிகாரிகள், தேர்தல் பணிகள் முடியும் வரை தேர்தல் தொடர்பான வேறு எந்தப் பணிகளிலும் ஈடுபடுத்தப்படக் கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடமாற்றத்திற்கான பின்னணி:
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த இளம்பகவத் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததே இந்த மாற்றத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அவர் ஆளுங்கட்சிக்குச் சார்பாகச் செயல்படுவதாகவும், மாற்றுக் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க அனுமதி மறுத்துப் புறக்கணிப்பதாகவும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்குக் கடிதங்கள் மற்றும் புகார்களை அனுப்பி வந்தனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டுத் தேர்தல் ஆணையம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. தேர்தல் தேதிக்குச் சில நாட்களே உள்ள நிலையில், மாவட்டத்தின் மிக முக்கியமான பொறுப்பில் இருக்கும் அதிகாரி மாற்றப்பட்டிருப்பது தூத்துக்குடி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 18 வேட்புமனுக்கள் தாக்கல்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:36:19 PM (IST)

தந்தை, மகன் கொலை வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை வழங்க சிபிஐ வலியுறுத்தல்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 3:31:11 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் சோதனை தீவிரம்: ரூ.9,81,298 மதிப்பிலான இலவசப் பொருட்கள் பறிமுதல்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 3:19:36 PM (IST)

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் மேலும் 3 பேர் வேட்புமனு: இதுவரை 6 மனுக்கள் தாக்கல்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 3:08:40 PM (IST)

தூத்துக்குடியில் ஏப்.4, 5ல் மாபெரும் பிராண சிகிச்சை முகாம்: அனுமதி முற்றிலும் இலவசம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:39:43 PM (IST)

அரசு டவுன் பஸ் மோதி பெண் உயிரிழப்பு : ஓட்டுநர் கைது - திருச்செந்தூரில் சோகம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:32:04 PM (IST)








அமலாApr 2, 2026 - 08:13:00 PM | Posted IP 172.7*****