» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் மேலும் 3 பேர் வேட்புமனு: இதுவரை 6 மனுக்கள் தாக்கல்!

வியாழன் 2, ஏப்ரல் 2026 3:08:40 PM (IST)

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 30ஆம் தேதி தொடங்கியது. தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் இரண்டாம் நாளான இன்று மேலும் 3 பேர் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
  • தூத்துக்குடி லெவஞ்சிபுரத்தைச் சேர்ந்த முத்துராஜ் என்பவரது மகன் பிரசன்னா குமார் (40), காமராஜர் இலட்சியப் பேரவையின் நிறுவனரான இவர் தேர்தல் அதிகாரி பிரபுவிடம் தனது மனுவை அளித்தார். பெருந்தலைவர் மக்கள் நல இயக்க நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் மற்றும் கட்சியின் மாநில நிர்வாகிகள் ராம்குமார், மைக்கேல் ராஜ், பிரவீன் பாபு ஆகியோர் வந்திருந்தனர்.
  • தூத்துக்குடி போல் பேட்டையைச் சேர்ந்த ஜோசப் என்பவரது மகனான சாமுவேல் (55), சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட மனுத் தாக்கல் செய்துள்ளார்.
  • தூத்துக்குடி பண்டாரம்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகனான சகாயம் (58), சிபிஐ (எம்.எல்) கட்சி சார்பில் போட்டியிடத் தனது வேட்புமனுவை வழங்கினார்.
தூத்துக்குடி தொகுதியில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களையும் சேர்த்து, இதுவரை மொத்தம் 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

நாளை (ஏப்ரல் 3) புனித வெள்ளி என்பதால் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாளை வேட்புமனுக்கள் பெறப்பட மாட்டாது. மீண்டும் நாளை மறுதினம், அதாவது ஏப்ரல் 4ஆம் தேதி (சனிக்கிழமை), வேட்புமனுத் தாக்கல் தொடரும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory