» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தந்தை, மகன் கொலை வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை வழங்க சிபிஐ வலியுறுத்தல்!

வியாழன் 2, ஏப்ரல் 2026 3:31:11 PM (IST)

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 போலீசாருக்கும் அதிகபட்ச தண்டனையான 'மரண தண்டனை' வழங்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் விசாரணையின் போது தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போலீசார் மீது குற்றம் சுமத்தியது. கடந்த மாதம் 23-ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன், இவர்கள் 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தார்.

தண்டனை விவரங்கள் குறித்த வாதத்திற்காக இன்று (ஏப்ரல் 2) மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் "குற்றவாளிகள் இருவரும் ஆயுதங்களால் மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்."சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியவர்களே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளதால், இது 'அரிதினும் அரிதான' வழக்கு (Rarest of rare case) என்ற அடிப்படையில் 9 பேருக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்" என வாதிட்டனர்

தண்டனையைக் குறைக்கக் கோரி குற்றவாளிகள் தரப்பில் "கொலை செய்யும் நோக்கில் தந்தை, மகனைத் தாக்கவில்லை; பென்னிக்ஸ் தகராறு செய்ததாலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஏற்கனவே 5 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டோம் என்பதையும், குடும்பப் பின்னணியையும் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்" என வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை (தண்டனை விவரம்) தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.


மக்கள் கருத்து

100 க்கு 100 உண்மைApr 2, 2026 - 08:58:57 PM | Posted IP 104.2*****

50 வருடம் திராவிட விளங்காத ஆட்சியில் காவல்துறையினர் கொலை செய்தால் - சஸ்பெண்ட், பனி நீக்கம், ஆயுதப்படைக்கு மாற்றம், கூ தி படைக்கு மாற்றம் என்று கேள்விப்பட்டோம், ஆனால் தூக்குத்தண்டனை கேள்விப்பட்டதே இல்லை, தூக்குத்தண்டனை , ஆயுத்தண்டனை எல்லாம் கொலைகார காவல்துறையினருக்கு வழங்க மாட்டாதது ஏன்? தூக்குத் தண்டனை வழங்காவிட்டால் மீண்டும் அடுத்த அப்பாவி மக்களை கொலை செய்ய துணிவார்கள் , கொலைக்கார காவல்துறையினருக்கு மட்டும் சட்டம் எல்லாம் ம யிருக்கு சமம்.

கீதாApr 2, 2026 - 08:10:26 PM | Posted IP 172.7*****

தந்தை மகன் இருவரும் காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டனர் என்று வழக்கை முடித்துவிட வேண்டியது தானே செத்தது தலித் தோ அல்லது அவர்களை சார்ந்தவர்களாக இருந்தால் இந்த நாடே கொந்தளித்திருக்கும் இப்போ நீதிபதிகள்( நிதிபதிகள்) பேரம் நடக்கிறதா தலித் உயிர்கள் மட்டும்தான் தமிழகத்தில் உயிர்கள் நடார் உயிர்கள் என்ன மயிறுக்கு சமமா வாழ்த்துக்கள் நீதிபதிகளே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory