» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாக்களிக்கும் வைபவம்: திருமண அழைப்பிதழ் பாணியில் தூத்துக்குடியில் தேர்தல் விழிப்புணர்வு!
செவ்வாய் 24, மார்ச் 2026 3:46:32 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தூத்துக்குடியில் தொண்டு நிறுவனம் சார்பில் வைக்கப்பட்டுள்ள வினோதமான "அழைப்பிதழ்" பேனர் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த "மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை" சார்பில் இந்த விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டுள்ளது. வழக்கமான அரசு அறிவிப்புகளைப் போலன்றி, ஒரு இல்லத் திருமண விழா அழைப்பிதழ் எந்த வடிவில் இருக்குமோ, அதே பாணியில் இந்த பேனர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிகழும் மங்கலகரமான 2026ம் வருடம் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி (23.04.2026)" எனத் தொடங்கி, ஒரு சுப நிகழ்விற்கு அழைப்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் உங்கள் அருகாமையில் உள்ள வாக்குச் சாவடியில் "வாக்களிக்கும் வைபவம்" நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் சுற்றமும் நட்பும் சூழ, அடையாள அட்டையுடன் வந்து வாக்கினைப் பதிவு செய்யும்படி அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழின் இறுதியில் "வாக்களிக்கும் விழாவில் அன்பளிப்பு பெறுவதும் அளிப்பதும் பெரும் குற்றமாகும்" என்ற வாசகம் மூலம் தேர்தல் நேர்மையையும் அந்த அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலோடு, வாக்காளர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்த எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி, சமூக வலைதளங்களிலும் பரவி பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.14லட்சம் பறிமுதல்? வருமான வரித்துறை அதிரடி சோதனை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:43:49 PM (IST)

ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலையை மூடிமறைக்க முயன்றவர் இபிஎஸ் : கனிமொழி எம்.பி. சாடல்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:02:16 PM (IST)

கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை தோல்வி: தேர்தல் புறக்கணிப்பு - பொட்டலூரணி மக்கள் உறுதி!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:32:27 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:03:48 AM (IST)

அரசின் திட்டங்களே எங்களின் வெற்றிச் சின்னம்: திமுக வேட்பாளர் அமைச்சர் கீதா ஜீவன் நம்பிக்கை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:53:10 AM (IST)

தமிழக நலனுக்காக போராடும் உங்கள் வீட்டுப் போர் வீரன் நான்: பிரச்சாரத்தில் ராகுல் காந்தி முழக்கம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:47:24 AM (IST)







