» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு உச்சபட்ச தண்டனை உறுதி! - கனிமொழி எம்.பி கருத்து!
வெள்ளி 20, மார்ச் 2026 12:00:00 PM (IST)
விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை வழக்கில் தொடர்புடைய சமூக விரோதிக்குச் சட்டப்படி உச்சபட்ச தண்டனை கிடைப்பது உறுதி செய்யப்படும் எனத் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு, குற்றவாளியைக் கைது செய்த தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கையைத் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் கனிமொழி பாராட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: "இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட சமூக விரோதிக்கு மிகக் கடுமையான உச்சபட்ச தண்டனை கிடைப்பதை அரசு உறுதி செய்யும். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்கவும், அவர்கள் இந்தத் துயரிலிருந்து மீண்டு வரவும் எப்போதும் துணையாக இருப்போம்.
குற்றவாளிகளைத் தண்டிப்பதைச் சட்டம் பார்த்துக் கொள்ளும். ஆனால், குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பான சூழலை ஒரு சமூகமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்துதான் உறுதிப்படுத்த முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் விதிமீறல்களைக் கண்காணிக்க ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமனம் - ஆட்சியர் தகவல்!
வெள்ளி 20, மார்ச் 2026 3:09:28 PM (IST)

பிளஸ்-2 மாணவி கொலை வழக்கு: 10 நாட்களுக்குப் பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
வெள்ளி 20, மார்ச் 2026 12:23:09 PM (IST)

விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் தேர்வு: முதல்வர் ஸ்டாலின் நேர்காணல்!
வெள்ளி 20, மார்ச் 2026 11:30:00 AM (IST)

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியா? - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விளக்கம்!
வெள்ளி 20, மார்ச் 2026 10:58:25 AM (IST)

பள்ளி மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி!
வெள்ளி 20, மார்ச் 2026 10:18:35 AM (IST)

தூத்துக்குடியில் இதுவரை ரூ.17 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை சோதனை தீவிரம்!
வெள்ளி 20, மார்ச் 2026 8:21:40 AM (IST)








