» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இதுவரை ரூ.17 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை சோதனை தீவிரம்!

வெள்ளி 20, மார்ச் 2026 8:21:40 AM (IST)

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.17 லட்சத்து 8 ஆயிரத்து 880 ரொக்கப் பணத்தைப் பறக்கும் படையினர் இதுவரை பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதைத் தடுக்க, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் ஆங்காங்கே தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விதிமுறைகளின்படி, ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் பறக்கும் படையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில், இதுவரை மொத்தம் ரூ.17,08,880 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, சுமார் ரூ.19,780 மதிப்பிலான பரிசுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory