» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் விதிமீறல்களைக் கண்காணிக்க ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமனம் - ஆட்சியர் தகவல்!

வெள்ளி 20, மார்ச் 2026 3:09:28 PM (IST)



தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவினங்களைக் கண்காணிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். 

இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்  க.இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தனித்தனியே பொது, செலவினம் மற்றும் காவல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தின் பொதுப் பார்வையாளர்களாக மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி,  எலுச்சூரி ரத்னாகர ராவ் (73972 52344)  விளாத்திகுளம் மற்றும் தூத்துக்குடி தொகுதிகளையும், சோடிங்புயீ (73050 82344)  திருச்செந்தூர் மற்றும் திருவைகுண்டம் தொகுதிகளையும் கண்காணிப்பார்கள். ஓட்டப்பிடாரம் (தனி) மற்றும் கோவில்பட்டி ஆகிய தொகுதிகளுக்கு  அர்விந்த் குமார் வர்மா (72007 52344) பொதுப் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செலவினப் பார்வையாளர்கள்: வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்க நான்கு ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி தொகுதிகளுக்கு  அனூப் குமார் ஜெயின் (73973 52344), விளாத்திகுளம் தொகுதிக்கு  ஷிவ் பிரசாத் பால்,(97904 50340) பொறுப்பேற்றுள்ளனர். தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் தொகுதிகளை  நக்குல் அகர்வால், (97904 50087), திருவைகுண்டம் தொகுதியை  சன்னி கச்வாஹா (97904 50376) அவர்களும் கண்காணிப்பார்கள்.

காவல் பார்வையாளர் மற்றும் புகார் அளிக்கும் முறை: மாவட்டம் முழுவதும் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடத்தை முறைகளைக் கண்காணிக்க  ஹிர்மத் சுதிர் கல்யா, I.P.S. (73389 72344)  காவல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

பொதுமக்கள் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக மேற்கண்ட பார்வையாளர்களின் எண்களுக்கோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் 1800-599-1960 என்ற கட்டணமில்லா எண்ணிற்கோ புகார் அளிக்கலாம். மேலும், 94864 54714 என்ற வாட்ஸ்அப் எண் மற்றும் C-Vigil செயலி வழியாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory