» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்: தாயின் கண்ணீர் போராட்டத்தை மீறி சென்ற இளம்பெண்!
வெள்ளி 20, மார்ச் 2026 8:02:49 AM (IST)
குரும்பூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டுத் தஞ்சமடைந்த காதல் ஜோடியைப் பிரிக்க முடியாமல், பெண்ணின் தாய் கண்ணீர் விட்டுப் பாசப் போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே நாலுமாவடியைச் சேர்ந்த குட்டிமுத்து அர்ஜுன் (19) மற்றும் ஏரல் பகுதியைச் சேர்ந்த கீர்த்திகா (21) ஆகிய இருவரும் கல்லூரியில் படிக்கும்போது காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்குப் பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கோயம்புத்தூரில் உள்ள உறவினர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த கீர்த்திகா, நேற்று அங்கிருந்து தப்பி வந்து குரும்பூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
தகவல் அறிந்து நிலையத்திற்கு வந்த பெண்ணின் தாயார், மகளைத் தன்னுடன் வருமாறு கண்ணீர் மல்கக் கெஞ்சினார். பாசப் போராட்டம் நடத்தியும் பலனில்லாத நிலையில், கீர்த்திகா தனது காதலனுடன் செல்வதிலேயே உறுதியாக இருந்தார். கீர்த்திகா மேஜர் என்பதால், அவரது விருப்பத்தின் பேரில் போலீசார் அவரை காதலனுடன் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் விதிமீறல்களைக் கண்காணிக்க ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமனம் - ஆட்சியர் தகவல்!
வெள்ளி 20, மார்ச் 2026 3:09:28 PM (IST)

பிளஸ்-2 மாணவி கொலை வழக்கு: 10 நாட்களுக்குப் பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
வெள்ளி 20, மார்ச் 2026 12:23:09 PM (IST)

மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு உச்சபட்ச தண்டனை உறுதி! - கனிமொழி எம்.பி கருத்து!
வெள்ளி 20, மார்ச் 2026 12:00:00 PM (IST)

விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் தேர்வு: முதல்வர் ஸ்டாலின் நேர்காணல்!
வெள்ளி 20, மார்ச் 2026 11:30:00 AM (IST)

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியா? - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விளக்கம்!
வெள்ளி 20, மார்ச் 2026 10:58:25 AM (IST)

பள்ளி மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி!
வெள்ளி 20, மார்ச் 2026 10:18:35 AM (IST)








