» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோயில் உண்டியல் வருவாய் ரூ.4.36 கோடி: 1 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி காணிக்கை!
வெள்ளி 20, மார்ச் 2026 7:44:43 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் மாத உண்டியல் காணிக்கையாக ரூ.4.36 கோடி ரொக்கம் மற்றும் ஒரு கிலோவிற்கும் அதிகமான தங்கம் உள்ளிட்டவற்றை பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களால் செலுத்தப்படும் உண்டியல் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, மார்ச் மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி தக்கார் ரா. அருள்முருகன் தலைமையில் கோயில் நிர்வாக அலுவலக அரங்கில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
இணை ஆணையர் க. ராமு முன்னிலை வகித்தார். இந்து சமய அறநிலையத் துறை முதுநிலை கணக்கு அலுவலர் ராஜாராமன், உதவி ஆணையர்கள் ராமசுப்பிரமணியன், மெய்வேல், அலுவலகக் கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வாளர் செந்தில்நாயகி மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்பணியில் கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
உண்டியல் எண்ணப்பட்டதில் ரொக்கம் ரூ. 4,36,87,797, தங்கம்: 1,143 கிராம், வெள்ளி 20,474 கிராம், பித்தளை 91,180 கிராம், தகரம் 9,180 கிராம், செம்பு 12,360 கிராம், வெளிநாட்டு பணத்தாள்கள் 2,071 எண்ணம் இருந்ததாக கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் விதிமீறல்களைக் கண்காணிக்க ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமனம் - ஆட்சியர் தகவல்!
வெள்ளி 20, மார்ச் 2026 3:09:28 PM (IST)

பிளஸ்-2 மாணவி கொலை வழக்கு: 10 நாட்களுக்குப் பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
வெள்ளி 20, மார்ச் 2026 12:23:09 PM (IST)

மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு உச்சபட்ச தண்டனை உறுதி! - கனிமொழி எம்.பி கருத்து!
வெள்ளி 20, மார்ச் 2026 12:00:00 PM (IST)

விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் தேர்வு: முதல்வர் ஸ்டாலின் நேர்காணல்!
வெள்ளி 20, மார்ச் 2026 11:30:00 AM (IST)

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியா? - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விளக்கம்!
வெள்ளி 20, மார்ச் 2026 10:58:25 AM (IST)

பள்ளி மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி!
வெள்ளி 20, மார்ச் 2026 10:18:35 AM (IST)








