» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 18, மார்ச் 2026 8:36:39 PM (IST)
சாத்தான்குளம் அருகே கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ பனைக்குளம் பகுதியில், கடந்த 2021-ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக யோவான் அற்புதராஜ் (35) என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை (65) என்பவர் மீது சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம், குற்றம் சாட்டப்பட்ட செல்லத்துரை என்பவரை குற்றவாளி என உறுதி செய்து, அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து இன்று (18.03.2026) தீர்ப்பளித்தார்.
வழக்கைச் சிறப்பாகப் புலனாய்வு செய்த அப்போதைய ஆய்வாளர் பெர்னார்டு சேவியர், சாட்சிகளைச் சரியாக ஆஜர்ப்படுத்திய டி.எஸ்.பி ஆவுடையப்பன், திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ் மற்றும் உதவியாக இருந்த தலைமை காவலர் ராஜேந்திரன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-ம் ஆண்டில் மட்டும் இதுவரை மொத்தம் 8 கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் உலக வகைப்பாட்டியலாளர்கள் தின விழா!
புதன் 18, மார்ச் 2026 8:57:51 PM (IST)

அரசியல் நாகரிகம் இல்லாமல் பெண்களை இழிவுபடுத்தும் அதிமுக: அமைச்சர் பி. கீதா ஜீவன் கடும் கண்டனம்
புதன் 18, மார்ச் 2026 8:11:21 PM (IST)

ஆட்சி மாற்றத்திற்குப் பின் மாணவிக்கு உரிய நீதி கிடைக்கும்: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
புதன் 18, மார்ச் 2026 5:31:31 PM (IST)

முதல்முறை வாக்காளர்கள் எதற்கும் அடிபணியாமல் வாக்களிக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்!
புதன் 18, மார்ச் 2026 4:06:13 PM (IST)

வாட்ஸ்அப் கேஓய்சி செய்திகளை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அறிவுறுத்தல்!
புதன் 18, மார்ச் 2026 3:37:06 PM (IST)

தூத்துக்குடியில் உலக நுகர்வோர் உரிமை தின விழா
புதன் 18, மார்ச் 2026 3:20:31 PM (IST)








