» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்சி மாற்றத்திற்குப் பின் மாணவிக்கு உரிய நீதி கிடைக்கும்: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

புதன் 18, மார்ச் 2026 5:31:31 PM (IST)



தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும், அதன் பின்னர் உயிரிழந்த விளாத்திகுளம் மாணவியின் மரணத்திற்கு உரிய நீதி பெற்றுத்தரப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர்  நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில், கடந்த வாரம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட 12-ஆம் வகுப்பு மாணவியின் இல்லத்திற்கு இன்று நயினார் நாகேந்திரன் நேரில் சென்றார். அங்கு மாணவியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், மாணவியின் சகோதரியின் உயர்கல்வி செலவிற்காகத் தமிழக பாஜக சார்பில் நிதியுதவியையும் வழங்கினார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:    "திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து கிடக்கிறது. தங்கள் வீட்டுப் பெண்ணைப் பலி கொடுத்துவிட்டுத் தவிக்கும் அந்தப் பெற்றோரின் கண்ணீர், என் நெஞ்சில் ஆறா வடுவாக இருக்கிறது. இக்கொடூரச் சம்பவம் நடந்து பல நாட்கள் கடந்துவிட்டன; பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்காகத் தெருவில் இறங்கிப் போராடி வருகின்றனர். இருப்பினும், இந்த அரசு இயந்திரமும் காவல்துறையும் இதுவரை ஒரு குற்றவாளியைக் கூடக் கைது செய்யவில்லை என்பது வெட்கக்கேடானது.

மேலும், தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் நிச்சயம் நிகழும் என்றும், புதிய ஆட்சி அமைந்ததும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி நிலைநாட்டப்படும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory