» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசியல் நாகரிகம் இல்லாமல் பெண்களை இழிவுபடுத்தும் அதிமுக: அமைச்சர் பி. கீதா ஜீவன் கடும் கண்டனம்
புதன் 18, மார்ச் 2026 8:11:21 PM (IST)
பெண்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசியல் நாகரிகமோ, அடிப்படை அறமோ இல்லாமல் பெண்களை இழிவுபடுத்துவதையே சி.வி. சண்முகம் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு அரசின் இலவசத் திட்டங்களோடு பெண்களையும் ஒரு பொருளாக ஒப்பிட்டு அருவருக்கத்தக்க கருத்தை வெளியிட்ட அவர், தற்போது மீண்டும் பெண்களைக் கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார். இது பெண்களைப் பற்றிய அதிமுகவின் இழிவான மனநிலையை வெளிப்படுத்துகிறது.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் "திராவிட மாடல்" ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம் எனப் பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பெண்களின் உயர்கல்வி 52 சதவீதமாக உயர்ந்துள்ளதுடன், உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது.
பெண்களின் முன்னேற்றத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் அதிமுகவினர் பெண்களைத் தரக்குறைவாகப் பேசி வருகிறார்கள். ஓர் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், ஒரு மனிதராக இருப்பதற்குக் கூட சி.வி. சண்முகம் தகுதியற்றவர். பெண்களை இழிவுபடுத்தி வரும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று அமைச்சர் கீதா ஜீவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் உலக வகைப்பாட்டியலாளர்கள் தின விழா!
புதன் 18, மார்ச் 2026 8:57:51 PM (IST)

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 18, மார்ச் 2026 8:36:39 PM (IST)

ஆட்சி மாற்றத்திற்குப் பின் மாணவிக்கு உரிய நீதி கிடைக்கும்: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
புதன் 18, மார்ச் 2026 5:31:31 PM (IST)

முதல்முறை வாக்காளர்கள் எதற்கும் அடிபணியாமல் வாக்களிக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்!
புதன் 18, மார்ச் 2026 4:06:13 PM (IST)

வாட்ஸ்அப் கேஓய்சி செய்திகளை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அறிவுறுத்தல்!
புதன் 18, மார்ச் 2026 3:37:06 PM (IST)

தூத்துக்குடியில் உலக நுகர்வோர் உரிமை தின விழா
புதன் 18, மார்ச் 2026 3:20:31 PM (IST)








