» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி முஸ்லிம் சமுதாய நலச் சங்கம் சார்பில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
புதன் 18, மார்ச் 2026 3:13:03 PM (IST)

தூத்துக்குடியில் முஸ்லிம் சமுதாய நலச் சங்கம் சார்பில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி முஸ்லிம் சமுதாய நலச் சங்கம் சார்பில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தெற்குப் புதுத் தெருவில் நடைபெற்றது. 25-வது ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 1,000 பேருக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் ஏ.கே. மைதீன் தலைமை வகித்தார். ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அலீம் மற்றும் இமாம் சதக்கத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கச் செயலாளர் இப்ராகிம் மூசா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் தலைவர் மீராசா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் லோடு சைக்கிள்கள், அரிசி மூட்டைகள், வேஷ்டி மற்றும் சேலைகள், கல்வி உதவித்தொகை மற்றும் திருமண நிதியுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் செயலாளர் எம்.எஸ்.எப். ரகுமான், முன்னாள் துணைத் தலைவர் சாகுல் சிராஜுதீன், மாநில ஜமாத்துல் உலமா சபை பொருளாளர் மற்றும் அரசு காஜி முஜிபுர் ரகுமான், சங்கப் பொருளாளர் சாகுல் ஹமீது, அர் ரஹ்மான் நற்சேவை முகமது குட்டி, அரபி புர்கான் அலி, வழக்கறிஞர் அஜீஸ், ஐஸ்வர்யா கன்சிசன் பத்மநாதன், வி.வி.டி மேலாளர் ராஜேந்திரன், முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஜாமியா மஹல்லா முஸ்லிம் சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் ஏ.கே. மைதீன், செயலாளர் மூஸா, பொருளாளர் சாகுல் ஹமீது மற்றும் உறுப்பினர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை மிகச்சிறப்பாகச் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் உலக வகைப்பாட்டியலாளர்கள் தின விழா!
புதன் 18, மார்ச் 2026 8:57:51 PM (IST)

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 18, மார்ச் 2026 8:36:39 PM (IST)

அரசியல் நாகரிகம் இல்லாமல் பெண்களை இழிவுபடுத்தும் அதிமுக: அமைச்சர் பி. கீதா ஜீவன் கடும் கண்டனம்
புதன் 18, மார்ச் 2026 8:11:21 PM (IST)

ஆட்சி மாற்றத்திற்குப் பின் மாணவிக்கு உரிய நீதி கிடைக்கும்: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
புதன் 18, மார்ச் 2026 5:31:31 PM (IST)

முதல்முறை வாக்காளர்கள் எதற்கும் அடிபணியாமல் வாக்களிக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்!
புதன் 18, மார்ச் 2026 4:06:13 PM (IST)

வாட்ஸ்அப் கேஓய்சி செய்திகளை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அறிவுறுத்தல்!
புதன் 18, மார்ச் 2026 3:37:06 PM (IST)








