» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலக்கையும் கடந்து வெற்றி பெறுவோம்: இப்தார் விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!
புதன் 18, மார்ச் 2026 12:16:21 PM (IST)

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிர்ணயித்துள்ள 200 தொகுதிகள் என்ற இலக்கையும் தாண்டி, வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்" என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு சார்பில் நடைபெற்ற மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவர் மைதீன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் ச் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன்: தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் மத நல்லிணக்கத்தோடு அண்ணன், தம்பி, மாமன், மச்சான் எனச் சகோதரப் பாசத்துடன் பழகி வருகிறோம். இந்த ஒற்றுமையைச் சீர்குலைக்கப் பிற மாநிலங்களைப் போலத் தமிழகத்திலும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றனர்.
சுதந்திர இந்தியாவில் 'இதைத்தான் சாப்பிட வேண்டும், இதைத்தான் உடுத்த வேண்டும்' எனத் தனது கொள்கைகளைக் கட்டாயமாகத் திணிக்கும் போக்கை பாஜக கடைப்பிடிக்கிறது. நாம் அனைத்து மதங்களையும் மதிக்கிறோம்; ஆனால் மதவெறியை எதிர்க்கிறோம்.
முதல்வர் வகுத்துள்ள 200 தொகுதிகள் என்ற இலக்கையும் கடந்து, 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் வகையில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தல் களம் காணத் தயாராக வேண்டும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் திமுக மாவட்டத் துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், மருத்துவ அணித் தலைவர் அருண்குமார், காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் சகாயராஜ், முன்னாள் எம்.எல்.ஏ டேனியல்ராஜ், முன்னாள் மாவட்டத் தலைவர் முரளிதரன், மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக, சமத்துவ மக்கள் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் உலக வகைப்பாட்டியலாளர்கள் தின விழா!
புதன் 18, மார்ச் 2026 8:57:51 PM (IST)

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 18, மார்ச் 2026 8:36:39 PM (IST)

அரசியல் நாகரிகம் இல்லாமல் பெண்களை இழிவுபடுத்தும் அதிமுக: அமைச்சர் பி. கீதா ஜீவன் கடும் கண்டனம்
புதன் 18, மார்ச் 2026 8:11:21 PM (IST)

ஆட்சி மாற்றத்திற்குப் பின் மாணவிக்கு உரிய நீதி கிடைக்கும்: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
புதன் 18, மார்ச் 2026 5:31:31 PM (IST)

முதல்முறை வாக்காளர்கள் எதற்கும் அடிபணியாமல் வாக்களிக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்!
புதன் 18, மார்ச் 2026 4:06:13 PM (IST)

வாட்ஸ்அப் கேஓய்சி செய்திகளை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அறிவுறுத்தல்!
புதன் 18, மார்ச் 2026 3:37:06 PM (IST)








