» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழக அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவியருக்கு அழைப்பு!
புதன் 18, மார்ச் 2026 11:41:05 AM (IST)
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில், கல்லூரிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சி, தங்குமிடம் மற்றும் சத்தான உணவு வசதியுடன் விளையாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.
2026–2027 ஆம் ஆண்டுக்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதி மாணவ/மாணவிகளுக்கான சேர்க்கைக்கு 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். 01.07.2001 அன்று அல்லது அதற்கு பின்னர் பிறந்தவராகவும், 01.07.2009 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்தவராகவும் இருக்கவேண்டும்.
UG Admission: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் மாணவ/மாணவியர்கள் சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர்க்கப்படுவர்.
விளையாட்டுத்தகுதி: தேசிய, மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முதுநிலைபட்டப்படிப்பு (Postgraduate) முதலாம் ஆண்டு படிப்பில் சேர்வதற்காக இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்கவேண்டும்.
இளநிலைப் படிப்பின் போது சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ / மாணவியர்கள், சிறப்புநிலை விளையாட்டுவிடுதி சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தினை 13.03.2026 முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கடைசிநாள்: 26.03.2026 அன்று மாலை 5.00 மணி ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைப்பேசி 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டுப் போட்டிகள் & நடைபெறும் இடம்
தடகளம், பளுதூக்குதல், ஜுடோ, வாள்விளையாட்டு, கால்பந்து (ஆ), கையுந்துபந்து: ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னை.
கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து (பெ), கைபந்து : ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கம், சென்னை.
ஹாக்கி, கபாடி: மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கம், எழும்பூர்.
தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் விதிமீறல்களைக் கண்காணிக்க ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமனம் - ஆட்சியர் தகவல்!
வெள்ளி 20, மார்ச் 2026 3:09:28 PM (IST)

பிளஸ்-2 மாணவி கொலை வழக்கு: 10 நாட்களுக்குப் பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
வெள்ளி 20, மார்ச் 2026 12:23:09 PM (IST)

மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு உச்சபட்ச தண்டனை உறுதி! - கனிமொழி எம்.பி கருத்து!
வெள்ளி 20, மார்ச் 2026 12:00:00 PM (IST)

விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் தேர்வு: முதல்வர் ஸ்டாலின் நேர்காணல்!
வெள்ளி 20, மார்ச் 2026 11:30:00 AM (IST)

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியா? - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விளக்கம்!
வெள்ளி 20, மார்ச் 2026 10:58:25 AM (IST)

பள்ளி மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி!
வெள்ளி 20, மார்ச் 2026 10:18:35 AM (IST)









S. VasanthakumarMar 19, 2026 - 07:11:01 PM | Posted IP 172.7*****