» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் பணி இடைநீக்கம்: முறைகேடு புகாரில் நடவடிக்கை!
செவ்வாய் 17, மார்ச் 2026 8:19:36 AM (IST)
தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் சரவணக்குமார், பழைய திட்டப்பணிகளில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அதிரடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் சரவணக்குமார் துணை ஆணையராகப் பணியாற்றி வருவதற்கு முன்னதாக, நாகர்கோவில் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சிகளில் பணியாற்றியுள்ளார். அந்த சமயத்தில், குப்பைகளைத் தரம் பிரித்து உரமாக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளில் அவர் முறைகேடு செய்ததாகப் புகார்கள் எழுந்தன.இது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு (Vigilance) போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் தொடர்ச்சியாக, சரவணக்குமாரைத் துறை ரீதியாகப் பணி இடைநீக்கம் செய்து நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனர் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு நகலைத் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா நேற்று அவரிடம் நேரில் வழங்கினார்.
நேற்று வழக்கம்போல் அலுவலகப் பணிக்காக வந்திருந்த துணை ஆணையர் சரவணக்குமார், ஆணையரிடம் இருந்து இடைநீக்க உத்தரவைப் பெற்றுக் கொண்டார். நகலைப் பெற்ற அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து விறுவிறுவென வெளியேறிச் சென்றார். இந்தச் சம்பவம் மாநகராட்சி ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் உலக வகைப்பாட்டியலாளர்கள் தின விழா!
புதன் 18, மார்ச் 2026 8:57:51 PM (IST)

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 18, மார்ச் 2026 8:36:39 PM (IST)

அரசியல் நாகரிகம் இல்லாமல் பெண்களை இழிவுபடுத்தும் அதிமுக: அமைச்சர் பி. கீதா ஜீவன் கடும் கண்டனம்
புதன் 18, மார்ச் 2026 8:11:21 PM (IST)

ஆட்சி மாற்றத்திற்குப் பின் மாணவிக்கு உரிய நீதி கிடைக்கும்: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
புதன் 18, மார்ச் 2026 5:31:31 PM (IST)

முதல்முறை வாக்காளர்கள் எதற்கும் அடிபணியாமல் வாக்களிக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்!
புதன் 18, மார்ச் 2026 4:06:13 PM (IST)

வாட்ஸ்அப் கேஓய்சி செய்திகளை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அறிவுறுத்தல்!
புதன் 18, மார்ச் 2026 3:37:06 PM (IST)








