» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல்துறை மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்: சிறப்பாகப் பணியாற்றிய 48 காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு

ஞாயிறு 8, மார்ச் 2026 8:44:12 AM (IST)



தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டத்தில், சிறப்பாகப் பணியாற்றிய 48 காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன்  தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளின் புலன் விசாரணை நிலை, கஞ்சா மற்றும் புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், நீதிமன்றப் பணிகளை விரைந்து முடிக்கவும் எஸ்பி உத்தரவிட்டார். மேலும், வரவிருக்கும் தேர்தல் பாதுகாப்புப் பணிகள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற சங்கிலி பறிப்பு (Chain Snatching) சம்பவத்தில், துரிதமாகச் செயல்பட்டு எதிரியைக் கைது செய்து சொத்துக்களை மீட்ட காவல் குழுவினருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதுதவிர, கடந்த பிப்ரவரி மாதத்தில் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் என மொத்தம் 48 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நற்பணிச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்  ஆறுமுகம்,  தீபு மற்றும் மாவட்டத்தின் அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory