» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி-யாக தேர்வு : உதயநிதி ஸ்டாலினுக்கு மீனவச் சமூகத்தினர் நன்றி!
ஞாயிறு 8, மார்ச் 2026 8:38:57 AM (IST)

மீனவர் சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்ததற்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தூத்துக்குடி வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மீனவச் சமூகத்தினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகப் பரதர் குலத்தைச் சேர்ந்த பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். மீனவர் சமுதாயத்திற்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் இந்த முக்கிய வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வருக்குச் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அரசு முறைப் பயணமாகத் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை, கோரமண்டல் சமூக நற்பணி மன்றத் தலைவர் பிரின்ஸ்டன் மெரிண்டோ வி. ராயன் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். மீனவச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை டெல்லி அவைக்கு அனுப்பி வைத்ததற்காக முதல்வருக்குத் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டதோடு, துணை முதல்வருக்குப் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள் சின்னம் பட்டியல்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:12:53 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் 1868 ஆக உயர்வு: இறுதி பட்டியலில் 13.88 லட்சம் வாக்காளர்கள்..!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 4:57:32 PM (IST)

மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் அமல்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:49:01 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் ஒப்படைப்பு : ஆட்சியர் தகவல்
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:44:04 PM (IST)

காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:08:02 PM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: வேட்பாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ., பிரச்சாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:25:31 AM (IST)







