» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆழ்வார்திருநகரி கோயில் மாசித் திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சனி 7, மார்ச் 2026 8:27:44 AM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் மாசித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ‘கோவிந்தா கோவிந்தா’ முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில்இந்த ஆண்டிற்கான மாசித் திருவிழா கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது.  

தொடர்ந்து விஸ்வரூபம் மற்றும் திருமஞ்சனம், நித்தியல் கோஷ்டி வழிபாடுகள் நடைபெற்றன: காலை 7 மணிக்கு, மீன லக்னத்தில் சுவாமி நம்மாழ்வார் சிறப்பு அலங்காரங்களுடன் திருத்தேரில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்திப் பெருக்குடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து நிலை சேர்ந்தது.

இந்நிகழ்வில் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், கோயில் செயல் அலுவலர் சதீஷ், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஆதிநாதன், திமுக நகரச் செயலாளர் கோபிநாத், அதிமுக நகரச் செயலாளர் செந்தில் ராஜகுமார் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory