» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சம்பன்குளம் தூர்வாரும் பணி: ஆட்சியர் நேரில் ஆய்வு
வியாழன் 5, மார்ச் 2026 8:32:38 PM (IST)

கருங்குளம் பகுதியில் அமைந்துள்ள பழமையான சம்பன்குளம் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோவில் மற்றும் மார்த்தாண்டேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரமாக சம்பன்குளம் திகழ்கிறது. நீண்டகாலமாகப் பராமரிப்பின்றி அமலைச் செடிகள் அடர்ந்து தூர்ந்து போயிருந்ததால், லேசான மழையின் போது கூட தண்ணீர் வெளியேறி கருங்குளம் - மூலைக்கரைப்பட்டி சாலையில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இதனைச் சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.
மாவட்ட நிர்வாகத்தின் நிதி உதவி மற்றும் எக்ஸ்னோரா நிறுவனத்தின் வாடகை இல்லா இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ராட்சத இயந்திரங்கள் கொண்டு அமலைச் செடிகள் அகற்றப்பட்டு, குளத்தின் கரைகளைப் பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன: குளத்தின் கரைகளில் கற்கள் பதித்து, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடைப்பயிற்சி தடம் (Walking Track) அமைக்க வேண்டும் என மாதிரி தாமிரபரணி ஒருங்கிணைப்பாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கோரிக்கை விடுத்தார். இதனைப் பரிசீலித்த ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுக்க ஒன்றிய ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.
தாதன்குளம் பகுதியில் குடிநீர் விநியோகத்தைச் சீரமைக்கக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த சுந்தர் விடுத்த கோரிக்கைக்கு, விரைவில் தீர்வு காணப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார். ஆய்வின் போது ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் தாஹர் அகமது, நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனர். ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து, கருங்குளம் மற்றும் கொங்கராயகுறிச்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிகள் : எஸ்.பி., மதன் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 8:37:27 PM (IST)

யுத்த வெறி பிடித்த அமெரிக்கா, இஸ்ரேலைக் கண்டித்து தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
வியாழன் 5, மார்ச் 2026 8:15:26 PM (IST)

விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:26:55 PM (IST)

தாமிரபரணி அருகிலிருந்தும் குடிநீருக்குத் தவிப்பு: வசவப்பபுரம் கிராம மக்கள் திண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:48:17 PM (IST)

பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிப்பு : தூத்துக்குடியில் உற்சாகக் கொண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:49:06 PM (IST)

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)









