» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் ஆட்சியர் க. இளம்பகவத் நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இன்று (05.03.2026) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
புதுக்கோட்டையில் உள்ள T.D.T.A. P.S. பெரியநாயகம் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், அங்கு மாணாக்கர்கள் அமைதியான முறையில் தேர்வு எழுதுவதை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து அவர், வல்லநாடு வி.றி.வி.டி அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் மாணாக்கர்கள் தேர்வு எழுதுவதை பார்வையிட்டார். ஆய்வின் போது, தேர்வு அறைகளில் போதிய வெளிச்சம், காற்றோட்டம் மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.
தேர்வுகள் முறைகேடுகளின்றி நடப்பதை உறுதி செய்ய நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படைகளின் செயல்பாடுகள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மாணாக்கர்களுக்குத் தேவையான மருத்துவ முதலுதவி மற்றும் இதர சுகாதார ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டம்: 97 பேர் கைது!
வியாழன் 5, மார்ச் 2026 12:44:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 209 சப்-இன்ஸ்பெக்டர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து!
வியாழன் 5, மார்ச் 2026 8:41:05 AM (IST)

டிசிடபிள்யூ நிறுவனத்தில் 55-வது தேசிய பாதுகாப்பு தின விழா
வியாழன் 5, மார்ச் 2026 8:07:30 AM (IST)

திருச்செந்தூர் அவதார பதியில் அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தின விழா கோலாகலம்!
வியாழன் 5, மார்ச் 2026 8:00:43 AM (IST)

காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்: எஸ்பி மதன் நேரடி விசாரணை
புதன் 4, மார்ச் 2026 8:14:22 PM (IST)

தூத்துக்குடி வருகை தரும் துணை முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் முடிவு?
புதன் 4, மார்ச் 2026 8:08:03 PM (IST)