» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தாமிரபரணி அருகிலிருந்தும் குடிநீருக்குத் தவிப்பு: வசவப்பபுரம் கிராம மக்கள் திண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:48:17 PM (IST)
தாமிரபரணி ஆற்றிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் வசவப்பபுரம் கிராமம் இருந்தும், பல தலைமுறைகளாகத் தொடரும் குடிநீர் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காணக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தாலுகா, கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வசவப்பபுரம் கிராமத்தில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. தாமிரபரணி ஆற்றின் அருகிலேயே இந்த ஊர் அமைந்திருந்தாலும், இவர்களுக்குக் கூட்டு குடிநீர் திட்டம் மூலமாகவே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் குழாய் உடைப்பு அல்லது மின்மோட்டார் பழுது ஏற்படும் போதெல்லாம், அதனைச் சரி செய்ய 7 முதல் 10 நாட்கள் வரை ஆகிறது.
தற்போதும் கருங்குளம் அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டு 5 நாட்களாகியும் சரி செய்யப்படவில்லை. இதனால் கோடைக்காலத்தில் மக்கள் தண்ணீருக்காகப் அண்டை ஊர்களுக்குக் குடங்களுடன் அலையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "எங்களுக்குக் கூட்டு குடிநீர் திட்டம் வேண்டாம். அதற்குப் பதிலாகத் தாமிரபரணி ஆற்றில் எங்கள் ஊருக்கெனத் தனியாக உறைகிணறு அமைத்துத் தர வேண்டும் எனப் பலமுறை மனு அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாக மாவட்ட நிர்வாகமும், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலரும் தலையிட்டு இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்," என வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிகள் : எஸ்.பி., மதன் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 8:37:27 PM (IST)

சம்பன்குளம் தூர்வாரும் பணி: ஆட்சியர் நேரில் ஆய்வு
வியாழன் 5, மார்ச் 2026 8:32:38 PM (IST)

யுத்த வெறி பிடித்த அமெரிக்கா, இஸ்ரேலைக் கண்டித்து தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
வியாழன் 5, மார்ச் 2026 8:15:26 PM (IST)

விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:26:55 PM (IST)

பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிப்பு : தூத்துக்குடியில் உற்சாகக் கொண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:49:06 PM (IST)

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)









