» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டம்: 97 பேர் கைது!

வியாழன் 5, மார்ச் 2026 12:44:13 PM (IST)



தூத்துக்குடியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 97 பேர் கைது செய்யப்பட்டனர்.

வருவாய்த்துறையினரின் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FERA) சார்பாக தமிழகம் தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இன்று தூத்துக்குடியில் அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்திலிருந்து கண்டன ஊர்வலம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், கிராம நிர்வாக அலுவலர் சங்க ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், மற்றும் முக்கிய நிர்வாகிகளான சந்திரசேகரன், சண்முகராஜ், சுரேஷ்குமார், லிங்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் 42 பெண்கள் உட்பட மொத்தம் 97 வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

ஊர்வலமாக வந்த போராட்டக்காரர்கள், பாளையங்கோட்டை சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு திடீரென நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது நீண்டகால கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த மறியல் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சுமார் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் இருந்த தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வாளர் மோகன் அய்யர் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்ட 97 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory