» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தீப்பெட்டி ஆலை தீவிபத்து: உயிரிழப்பு 3-ஆக உயர்வு!
புதன் 4, மார்ச் 2026 8:13:16 AM (IST)
கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலை தீ விபத்தில் சிக்கி, தீவிர சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இலுப்பையூரணி நியூ வெங்கடேஷ் நகரைச் சேர்ந்த காளிமுத்து மகன் முருகன் என்பவர், பாண்டவர்மங்கலம் பகுதியில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். கடந்த திங்கள்கிழமை, சிவகாசியிலிருந்து சுமை வாகனத்தில் கொண்டு வரப்பட்ட தீக்குச்சி மூட்டைகளை ஆலையின் அருகிலுள்ள கிடங்கில் இறக்கி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில், விஜயாபுரி கீழத் தெருவைச் சேர்ந்த சமுத்திரம் மகன் கார்த்திக் (27) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாண்டவர்மங்கலம் பகுதியில் தங்கி வேலை செய்து வந்த கேரளத்தைச் சேர்ந்த கணேசன் (47) மற்றும் சுமை வாகன ஓட்டுநரான சிவகாசி பேரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுடலைமுத்து (42) ஆகிய இருவர் மீட்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி இருவரும் நேற்று உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்திற்கான காரணம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள் சின்னம் பட்டியல்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:12:53 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் 1868 ஆக உயர்வு: இறுதி பட்டியலில் 13.88 லட்சம் வாக்காளர்கள்..!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 4:57:32 PM (IST)

மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் அமல்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:49:01 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் ஒப்படைப்பு : ஆட்சியர் தகவல்
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:44:04 PM (IST)

காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:08:02 PM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: வேட்பாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ., பிரச்சாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:25:31 AM (IST)







