» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது கார் மோதி விபத்து: வாலிபர் பலி!
புதன் 4, மார்ச் 2026 8:10:31 AM (IST)
கோவில்பட்டி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில், படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வேலாயுதபுரத்தைச் சேர்ந்தவர் செல்வ பெருமாள் மகன் அலெக்ஸ். இவர் நேற்று மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், நாலட்டின்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகேயுள்ள அணுகு சாலையில் காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக கோவில்பட்டி சிந்தாமணி நகரைச் சேர்ந்த சண்முகராஜ் மகன் ஸ்ரீ பாலாஜி (21) ஓட்டி வந்த இருசக்கர வாகனமும், அலெக்ஸின் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஸ்ரீ பாலாஜி மற்றும் அலெக்ஸ் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர், காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி ஸ்ரீ பாலாஜி உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அலெக்ஸ், மேல் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்து நிகழ்ந்த விதம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள் சின்னம் பட்டியல்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:12:53 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் 1868 ஆக உயர்வு: இறுதி பட்டியலில் 13.88 லட்சம் வாக்காளர்கள்..!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 4:57:32 PM (IST)

மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் அமல்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:49:01 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் ஒப்படைப்பு : ஆட்சியர் தகவல்
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:44:04 PM (IST)

காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:08:02 PM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: வேட்பாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ., பிரச்சாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:25:31 AM (IST)







