» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சொத்து தகராறில் அரசு ஊழியரை அரிவாளால் வெட்டிய லாரி ஓட்டுநருக்கு 3 ஆண்டுகள் சிறை!

புதன் 4, மார்ச் 2026 8:06:28 AM (IST)

தூத்துக்குடி அருகே சொத்து தகராறில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரை அரிவாளால் வெட்டிய லாரி ஓட்டுநருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகேயுள்ள கட்டாலங்குளத்தைச் சேர்ந்தவர் ஆண்டி. இவருடைய மகன் ஆ. புதியவேல் (63), ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவருக்கும், இவரது சகோதரர் மகனான அதே பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செ. புதியவேலுக்கும் (40) இடையே நீண்டகாலமாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

கடந்த 30.03.2022 அன்று, செ. புதியவேல் தனது உறவினர்களான கணேசமூர்த்தி மற்றும் ஞானம்மாள் ஆகியோருடன் ஆ. புதியவேல் வீட்டிற்குச் சென்று சொத்து தொடர்பாகத் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில், செ. புதியவேல் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆ. புதியவேலை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து சாயர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, குற்றம் சாட்டப்பட்ட செ. புதியவேலுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மேலும், இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த கணேசமூர்த்தி மற்றும் ஞானம்மாள் ஆகிய இருவரையும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவித்து உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory