» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாய்க்காலில் ஆண் சடலம் மீட்பு: போலீஸ் விசாரணை!

புதன் 4, மார்ச் 2026 8:02:14 AM (IST)

திருச்செந்தூர் வாய்க்காலில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த நபர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் பாலமுருகன் (48), கட்டடத் தொழிலாளி. இவர் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி இரவு தனது மனைவி காளியம்மாள் மற்றும் உறவினர்களுடன் காரில் திருச்செந்தூருக்கு வந்துள்ளார்.

உடனிருந்தவர்கள் கோயிலுக்குச் சென்ற நிலையில், பாலமுருகன் மட்டும் காரிலேயே ஓய்வெடுத்துள்ளார். மறுநாள் காலை உறவினர்கள் வந்து பார்த்தபோது, காரில் இருந்த பாலமுருகனைக் காணவில்லை. அவரது மகன் காளிதாஸ் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், சோகத்துடன் ஊருக்குத் திரும்பினர்.

இந்நிலையில், கடந்த நேற்று திருச்செந்தூர் டி.பி. ரோட்டில் உள்ள வாய்க்கால் பாலத்தின் அடியில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலூகா போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இறந்து கிடந்தவர் மாயமான ஸ்ரீவில்லிபுத்தூர் தொழிலாளி பாலமுருகன் என்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, பாலமுருகன் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory