» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது : இரு சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 9:20:48 PM (IST)
கோவில்பட்டியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இரு வாலிபர்களைப் போலீசார் கைது செய்தனர். அவர்களுடன் இருந்த இரு இளஞ்சிறார்கள் நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் தலைமையில், சிறப்பு சார்பு ஆய்வாளர் அர்ஜுனராஜ் மற்றும் போலீசார் இன்று (03.03.2026) சங்கரலிங்கபுரம் முதல் மூப்பன்பட்டி வரை செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர்.
போலீசார் அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த சேதுபதி பாண்டியன் (22), பாலமுருகன் (23) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயதுடைய இரு இளஞ்சிறார்கள் என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் சட்டவிரோதமாக வைத்திருந்த மூன்று அரிவாள்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, சேதுபதி பாண்டியன் மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதில் தொடர்புடைய இரு இளஞ்சிறார்கள் திருநெல்வேலியில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், துரிதமாகச் செயல்பட்டு எதிரிகளைக் கைது செய்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாரைத் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் வெகுவாகப் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முத்தாலங்குறிச்சி காமராஜ்-க்கு சமூக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தலைமைத்துவ விருது: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 3, மார்ச் 2026 8:37:02 PM (IST)

கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சமூக சேவை : தூத்துக்குடி நீதிக்குழுமம் தீர்ப்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 7:40:21 PM (IST)

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் : தூத்துக்குடியில் 3 நாள் கருத்தரங்கு தொடக்கம்!
செவ்வாய் 3, மார்ச் 2026 4:10:23 PM (IST)

தூத்துக்குடியில் 102 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம்: அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 3, மார்ச் 2026 11:58:07 AM (IST)

வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளச் சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 10:51:26 AM (IST)

சிவஞானபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா
செவ்வாய் 3, மார்ச் 2026 10:21:30 AM (IST)










